You are currently viewing ஐ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ நூல் வெளியீட்டு விழா

ஐ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் ஏற்பாட்டில், துறையின் பழைய மாணவன் திரு. ஜ.வி.மகாசேனனின் ‘இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல்’ எனும் புத்தக வெளியீடு, ஆகஸ்ட்-20 (2024) அன்று, கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு துறைத்தலைவர் பேராசிரியர்கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றறது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்களும், சிறப்பு அதிதியாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

நூல் வெளியீட்டுரையை வருகைதரு விரிவுரையாளர் சட்டத்தரணி திரு. சி.ஆ.யோதிலிங்கம் அவர்கள் வழங்கி இருந்தார். நூலுக்கான மதிப்பீட்டுரையை அரசியல் எழுத்தாளர் ம.நிலாந்தன் அவர்களும் வழங்கி இருந்தார். முதற் பிரதியை நூலாசிரியர் ஐ.வி.மகாசேனனின் பாடசாலைக்கால அரசறிவியல் ஆசிரியர்களான திரு. வ.தவகுலசிங்கம் மற்றும் சி.இளங்கோ அவர்கள் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

Leave a Reply