You are currently viewing அரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு தெரிவு 2025/2026

அரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு தெரிவு 2025/2026

2025/2026 கல்வி வருடத்துக்கான அரசறிவியல் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகஸ்ட்-27 (2025), புதன்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துறைத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தனது ஆரம்ப உரையில் அரசறிவியல் ஒன்றியத்தின் கடந்த கால செயற்பாட்டு அனுபவங்களையும், எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய தடங்கள் பற்றியும் விபரித்திருந்தார்.

தொடந்து புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. புதிய நிர்வாகத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட A.நிரோஷா தனது கன்னி தலைமை உரையில், புதிய நிர்வாகம் தெரிவு செய்யத்தவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படும் என்ற உறுதியை வழங்கி இருந்தார். இறுதியாக புதிய நிர்வாகத்தின் செயலாளர் s.லக்ஸா நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுக்கு வந்தது.

Leave a Reply